Categories கவிதை தோழியே தமிழே by Grace Piradhiba Posted on April 20, 2021 April 20, 2021 தோழியே தமிழே கேளு, தோட்டமே செய்தாய் பாரு! வாழிய தமிழே கேளு, வானமாய் விரிதல் பாரு! ஆழியே போலும் ஆசை ஆட்கொளத் திறந்த பூவே! வாழிய எனவே உன்னால் வாசனைப் பொழிதல் பாரு! Previous Post விண்தொடும் வல்லினங்கள் Next Post கற்றவை பற்றவை