கவிதை – Page 6 – www.worldpoetess.com
  Loading...

  அன்னைத் தமிழே ஆதார ஊற்றே
  சங்கம் வளர்த்த சிறப்பிற்கு உரியவளே
  சகலமும் தன்னுள் அடக்கிய சரித்திரமே
  வெல்லும் மொழியாய் எங்கும் நிறைந்த
  வெற்றி மகளே தத்தை அழகே
  தித்திக்கும் தீந்தமிழின் திகட்டாத பேரின்பமே
  தளர் நடை போட்டு வரும் இளந்தளிரே
  பழகு தமிழில் உனக்கு பாட்டிசைப்பேன்
  வழங்கு எமக்கு உயிர்த் துடிப்பு
  நித்திலமே எனை நீங்கா முத்திரையே
  நாவினில் கீதமாய் இசைக்கும் நாதமாய்
  என்றும் எனக்குள் ஊனாய் உயிராய்
  இலக்கிய இலக்கணங்களில் வாழ்பவளே
  இவ்வுலகில் என்றும் அழியா இறைவியே
  தமிழே எங்கள் தலைமை என்றே
  தரணியெங்கும் பறை சாற்றுவோம்.
  ~அன்புடன் ஆனந்தி
  மிச்சிகன், வட அமெரிக்கா

  பழகு மொழியே அழகு நாடே

  முழங்கு இசையே முழு நிலவே

  இனிக்கும் இதழே இன்ப ஊற்றே

  கனியின் சாறே கன்னல் சுவையே

  வணங்குகிறேன்

  —- அகன்

  Pin It on Pinterest