கவிதை – www.worldpoetess.com
  Loading...

  தந்தைதான் துணையிருந்தால்

  இவருடைய தோளே  தூளியாகும்

  இவ்வுலகைப் பார்க்கும் ஏணியாகும்

  இவருடைய முதுகே யானையாகும்

  இரதம் இழுக்கும் குதிரையாகும்

  எவரையும் காணும் தைரியம்

  இவர்தொடை பற்றிநிற்க வசமாகும்

  இவரென் தந்தை இணையிங்கு

  இவர்க்கில்லை என்பதே திடமாகும்

  பொக்கைவாய்  மழலையாய்ச் சாய்ந்திட்டப்  

  பாசத்தோள் இறுமாப்பின்  பார்வையாகும்

  அக்கறையாய் முள்ளெடுத்த பொறித்தமீனும்

  மச்சையுமே தனியன்பின்  சின்னமாகும்

  தக்ககல்வி கண்டிப்பாய் அறிவுசேர்க்கும் 

  தரணியில் நற்பெயரின்  தூண்டிலாகும்

  பக்கத்தில் தந்தைதான்  துணையிருந்தால் 

  பூவுலகில் மணிமகுடம் வசமாகும்!

        –கிரேஸ் பிரதிபா

  அட்லாண்டா

  Normal
  0

  false
  false
  false

  EN-US
  X-NONE
  TA

  /* Style Definitions */
  table.MsoNormalTable
  {mso-style-name:”Table Normal”;
  mso-tstyle-rowband-size:0;
  mso-tstyle-colband-size:0;
  mso-style-noshow:yes;
  mso-style-priority:99;
  mso-style-parent:””;
  mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
  mso-para-margin-top:0in;
  mso-para-margin-right:0in;
  mso-para-margin-bottom:8.0pt;
  mso-para-margin-left:0in;
  line-height:107%;
  mso-pagination:widow-orphan;
  font-size:11.0pt;
  font-family:”Calibri”,sans-serif;
  mso-ascii-font-family:Calibri;
  mso-ascii-theme-font:minor-latin;
  mso-hansi-font-family:Calibri;
  mso-hansi-theme-font:minor-latin;
  mso-bidi-font-family:Latha;
  mso-bidi-theme-font:minor-bidi;}

  இளமையிலே காதல்வரும்

  முதுமையிலும் தொடர்ந்து வரும்

  மனதினிலே நினைத்து விட்டால்

  மயக்கமூட்டும் தேன்சாரல் விழும்

  மலரைச்சுற்றி வந்தக்காலத்தில்

  மதுக்குடமாய் அவள் நினைவிருக்கும்

  கனவினிலே தேன்சாரல் தெளிக்கும்

  காட்சி விரிப்பில் அது இனிக்கும்

  புத்தகம் தொடும்போதும்

  புத்தாக்கம் செய்யும் போதும்

  கற்றைக்குழலியின் நினைவுவரும்

  காற்றோடு அவள்பேசிய

  தெள்ளு தமிழ் சாரல் விழும்

  குற்றால அருவியிலே

  கொவ்வை மலர் சிரிப்பினிலே

  வண்டு வந்து அமர்ந்து

  வாலிபத்தைக் கரைக்கையிலே

  பட்டுத்தெறித்த முத்தத்துளியிலே

  பதறிவிழுந்தத் தேனடையாலே

  சிதறிக் கலந்ததுவே

  அதுஅவள் உவகையில்

  சிதறிக்கலந்ததுவே

  என் சிந்தையில் நாளும்

  வந்தமரும் சித்தனவாசலின்

  ஓவியமே என் மனதை மயக்கும்

  குற்றால மலையின் தேன்சாரல் மழையே

  அவள் உவகையில் உண்டு மகிழ்ந்து

  கண்டு தெளியாத வண்டினமே

  அவள் நினைவில்நித்தம்

  குளிக்கும் தேன்சாரல்மழையே

  அய்யோ… அது தேன்சாரல் மழையே

  செ.புனிதஜோதி

  *வந்துவிட்டு…போ…*

  கோர்க்கமுடியாதவார்த்தைகளால்

  கோர்வையாய்

  எழுதினாலும் தீர்க்கவாமுடியும்

  என்தனிமையை….

  நிறைந்துக் கிடக்கும்

  மௌனத்திற்குள்

  ஒளிந்துக்கொண்டு

  மீட்டுகிறாய்

  வீணையை…

  நரம்புகளில்

  நீ…நீ…ஸ்வரமே

  கேட்கும்…

  கேட்டுப்பார்க்க

  ஒரு நிமிடம்

  என் வாசல்வழியே

  வந்து விட்டு

  போயேன்…

  செ.புனிதஜோதி

  மறந்து மறைந்து

  போன நெறிமுறைகள்

  ஒழுக்கத்தின் சுவடுகளை

  அழித்து இடுகாடாய்

  மாறிவரும் இல்லங்கள்

  இல்லாள்

  வெளியேறியவுடன்

  நேற்றுவரை

  பத்தியும்,சாம்பிராணியும்

  பக்தியாய்

  மணந்த வீட்டில்

  சாராய வாடையில்

  நனைத்தெடுக்க நண்பர்களுக்கு

  அழைப்புமணி விடுகிறாய்

  அவள் சேமித்து வைத்த

  ஒழுக்கநெறி,ஒவ்வொரு மூலையிலும் காண்பித்த

  தீப ஆராதனை,நலம்,அக்கறை

  அத்தனையும் இடித்து

  சாரயக்கட்டடமாய்

  மாற்றிக்கொண்டிருக்கிறாய்

  இல்…ஆம் என்ற விகுதியை

  இழந்து அழகியலைத் துறக்கிறது

  1. செ.புனிதஜோதி

  வசந்தவாசல் திறப்பு*

  சுட்டெரிக்கும் சூரியனின்

  ஒளியின் சாரல்

  பட்டுத்தெறித்து

  பால் மழையாய்

  பொழிகின்றாயே

  வெண்ணிலவே…

  அருள்பொழியும்

  ஞானொளியால்

  அணைக்கின்றாய்

  வெம்மையினை…

  சீத அழகாய்

  உருமாறி

  நிறைக்கின்றாய்

  உன் அழகை….

  தொடு வானத்தூரத்தை

  குளத்தில் பூட்டி

  தொட்டு விட

  சொல்லியே அழைக்கின்றாய்….

  மதி ஞானம்

  கொண்டவளே

  மதம் போல

  எம்மீது ஏவுகின்றாய்….

  சுகமானராகமாய்

  லாவணிப்பாடுகின்றாய்….

  விடியலின் முகத்தை

  ஆழியில் கரைத்து

  விளையாட்டுக்

  காட்டுகின்றாய்…

  விடியாத என்கூரைக்குள்

  ஒளிவிளக்காய்

  மாறுகின்றாய்….

  வெள்ளிச்சிரிப்

  பொலியில்

  வீதியெங்கும் பிள்ளைமொழியாய்

  கலகலத்தேக்

  கிடக்கின்றாய்….

  கூச்ச நாச்சமின்றி

  கூசாமல் என்விழியோடு

  மொழிஅழகைக் கரைக்கின்றாய்…

  மரக்கிளைகளுக்கு இடையே

  மகிழம்பூ மணத்திற்கு நடுவே

  மதிமயங்கி கொஞ்சும் புள்ளினத்தின் சிருங்காரொலியை

  ரசனையோடு

  என் செவிகளுக்குள்

  விதைக்கின்றாய்…

  மாறன் மழையை

  சீத அழகால் பூமிப்பந்தில்

  தெளித்துவிட்டு

  வானமெங்கும் பூக்கோலம்

  போடுகின்றாய்…

  வசந்தவாசலின் பள்ளியறையை

  திறந்துவிட்டு ஆம்பலாய் மணக்கின்றாய்.

  செ.புனிதஜோதி

  இந்திரன் மயங்கிய மேனகை அழகுடன்

  சுந்தரவனத்து மல்லிகையும் கார்க்குழலிலேற

  தந்திரமில்லாது சிறையிலிட்டாள் என்னை

  மந்திரமாய் அன்பை மொழியில் பொழிந்தபடி

  இயந்திர வாழ்க்கையிலும் மின்வெட்டில்லா அன்புடன்

  இயங்கிய இல்லற வாழ்க்கையில் வேகத்தடையாய்

  பதுங்கியிருந்த முதுமையும் தலைக்காட்ட

  பதற்றம் கண்டது வாழ்க்கைப் பயணம்

  பிறைநெற்றியுடன் சிவந்த கன்னங்களையும்

  சூறையாடியதோ இளமையுடன் முதுமை

  முத்துப்பற்களின்  நட்பை இழந்த மென்னிதழும்

  முத்தாய்ப்பாய் உதிர்த்ததே காதலுடன் புன்முறுவலை

  நூற்றாண்டு கடந்த தாம்பத்திய உறவும்

  நூற்பாலையில் இழைந்தோடும் நூல் போலும்

  ஏற்ற இறக்கத்துடன் பின்னலிட, இன்றோ

  மறத்ததே அடங்கிய அவளது நாடியினால்

  மூடிய விழிகள் அன்புடன் அழைத்திட

  வடிந்தக் கண்ணீரை என்னவளுக்குக் காணிக்கையாக்கிப்

  படபடப்புடன் குருதி சிந்திய என் குருதயமும்

  ஓட்டத்தை நிறுத்திக் கொண்டதே நன்றியுடன் என்னவளுக்காக!

  உயிர் வளி நின்ற 

  ஓருயிர் விட்டுச் சென்ற

  நத்தைக் கூடொன்று

  கிடைத்ததென் 

  கையில்;

  உயிரினழகு

  இன்னமும்

  வட்ட வரிகளாய்

  உதிர்ந்த சருகின் 

  எடையில்;

  உடன் எடுத்துச் செல்ல

  ஒர் உந்துதல்;

  சென்ற உயிர்

  திரும்பிடில்

  உயிரற்ற கூடை

  உயிரோடிணைக்கும் 

  கனவில்;

  உணர்வின் மிகுதியில்

  ஐவிரல் அணைப்பில்

  காகித மெத்தையில்

  பதமாய் சுருட்டுகையில்

  நொறுங்கியது;

   

  அச் சிறு ஓடும்,

  என் இதயமும்,

  சில்லுகளில்;

  உதகம் 

  பிரிய மறுக்கும்

  உயிரற்ற அக்கூடு

  உணர்த்தியது,

  உயிர் பிரிந்திடினும்

  மெய் வேறிடம்

  செல்லாது;

   

  ஆங்கே

  பதை படிவமாகுமேயன்றி

  பற்றும் வேற்றுக் கரம் 

  ஒட்டாது!                                             

                                                       ~நளினி.

  Pin It on Pinterest